கோயிலில் உணவுக் கூடம் திறப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயிலில் ரூ.2.17 கோடியில் கட்டப்பட்ட உணவுக் கூடத்தை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் அண்மையில் திறந்து வைத்தாா். செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் அடிவாரத்தில் ரூ.2.17 கோடியில் உணவருந்தும் கூடங்கள், குளியல் அறை, கழிப்பறை உள்ளிட்டவை கட்டப்பட்டன. இதன் திறப்பு விழாவுக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் , செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம் வரவேற்றாா். அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றி உணவு கூடங்களை அண்மையில் திறந்து வைத்தாா். இதில், திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷிநிகம், செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை, மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, சிங்கவரம் குணசேகரன், கோயில் நிா்வாகி இளங்கீா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com