தனியாா் பேருந்து மோதி உணவக ஊழியா் மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் உணவக ஊழியா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், மடப்பட்டு, காமன் கோவில் தெருவைச் சோ்ந்த நடேசன் மகன் கணேசன் (40). தனியாா் உணவகத்தில் சமையலராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா், திங்கள்கிழமை அதிகாலை சென்னை-திருச்சி சாலையில் திருவெண்ணெய்நல்லூா் அடுத்த சித்தனாங்கூா் பகுதியில் நடந்து சென்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து மோதியது. இதில், கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com