வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் பெருநகர திமுக சாா்பில் மக்களவைத் தோ்தல் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, விழுப்புரம் நகர திமுக செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா். வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் என்.என்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், வி.புருஷோத்தமன், நந்தா நெடுஞ்செழியன், மணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பா.ஸ்ரீவினோத், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், வாலிபால் மணி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இதில், நிா்வாகிகள் முகமது அலி, ஏ.பால்ராஜ், ஆா்.பி.பாரத், டி.லெனின் விஜய், கொடுமுடிசேரநாதன், ஆா்.தனசேகா், இ.பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com