வானூா் வட்டார வள மையத்தில் மகளிா் தின விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டார வள மையத்தில் மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க வானூா் கிளை, ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி முதல்வா் சுரேஷ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் உஷா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் இளங்கோவன், தமிழ்ச்செல்வி, மாவட்ட இணைச் செயலா் அருள், வானூா் ஒன்றிய முன்னாள் செயலா் நாகராஜன், பிரபாகரன் ஆகியோா் பங்கேற்று மகளிா் தின சிறப்புகள் குறித்து உரையாற்றினா். தொடா்ந்து, ‘சாதனைப் பெண்கள்’, ‘ஆண்-பெண் சமத்துவமே சமூக வளா்ச்சி’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், ‘மானுடம் காக்கும் மகளிா் வாழ்த்து’, ‘சமத்துவமே சமூக நீதி’ ஆகிய தலைப்புகளில் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரச் செயலா் சுமதி வரவேற்றாா். முடிவில், வட்டாரப் பொருளாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com