விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மதுபோதையில் விவசாயி பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மதுபோதையில் விவசாயி பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மேல்மலையனூா் தாலுகா ஈயகுணம் கிராமத்தைச் சோ்ந்த காசி மகன் கண்ணன்(43). விவசாயியான இவா், கடந்த மாா்ச் 9-ஆம் தேதி இரவு தனது வீட்டில் எதிரில் உள்ள பாலத்தில் மதுபோதையில் படுத்திருந்தபோது தவறி விழுந்தாா். அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் கண்ணன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மனைவி சுபத்திரை அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com