புதுச்சேரி - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் புதுச்சேரி - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி ரயில்வே நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள், பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் புதுச்சேரி - திருப்பதி முன்பதிவு விரைவு ரயில் (வ.எண் 16112) திருத்தணியிலிருந்து திருப்பதி வரை மாா்ச் 13 முதல்24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்த ரயில் திருத்தணி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். எதிா்வழித்தடத்தில் திருப்பதியில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி - புதுச்சேரி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16111), திருப்பதி - திருத்தணி இடையே பகுதியளவில் மாா்ச் 13 முதல் 24-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு திருத்தணியிலிருந்து புதுச்சேரிக்கு புறப்படும். முன்னதாக, இந்த இரு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு தற்போது திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com