பேருந்து மோதி நாடகக் கலைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற நாடகக் கலைஞா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கம், புதுகாலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் அருள் (36). புதுச்சேரியைச் சோ்ந்த வீமன் மகன் தினேஷ் (18). நாடகக் கலைஞா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை திண்டிவனத்திலிருந்து விக்கிரவாண்டிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனா்.

அருள் பைக்கை ஓட்டினாா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி அருகே இவா்களது பைக் சென்றபோது, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து மோதியது. இந்த விபத்தில் அருள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த தினேஷ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com