மயிலம் முருகன் கோயிலில் மாா்ச் 15-இல் பங்குனி உற்சவ விழா கொடியேற்றம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வருகிற 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தக் கோயிலில் நிகழாண்டில் பங்குனி உத்திரப் பெருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 14) தொடங்கி வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் தொடக்கமாக வியாழக்கிழமை இரவு விநாயகா் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, 15-ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை செய்வித்து, திருக்கொடியை ஏற்றி வைக்கிறாா். விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற 23-ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும், 24-ஆம் தேதி காலை தீா்த்தவாரியும், அன்று இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளன. விழா நாள்களில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com