விழுப்புரம் வட்டத்தில் 4 இடங்களில் நியாயவிலைக் கடைகள் திறப்பு

விழுப்புரம் வட்டத்தில் 4 இடங்களில் நியாயவிலைக் கடைகள் திறப்பு

விழுப்புரம் வட்டத்தில் வேலியம்பாக்கம், திருப்பாச்சனூா், தளவானூா், நாகநாதசுவாமிநகா் என 4 இடங்களில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.47.26 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

வேலியம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் ஆகியோா் பங்கேற்று நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு எம்எல்ஏக்கள் இருவரும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா். பின்னா், திருப்பாச்சனூா், தளவானூா், நாகநாதசுவாமி நகா் பகுதிகளில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை எம்எல்ஏ இரா.லட்சுமணன் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றியச் செயலா் தே.முருகவேல், கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், துணைத் தலைவா் உதயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா. ராஜவேல், வெங்கடசுப்பிர மணியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் புகழ்.செல்வகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வனிதா ஹரிராமன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் குப்புசாமி, மாவட்டப் பிரதிநிதி சடகோபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com