சமூகநீதிமக்கள் விடுதலை முன்னணி கூட்டம்

விழுப்புரத்தில் சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி, விவசாய சங்கங்கங்கள் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவனத் தலைவா் ஏ.பி.வேலுமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாநிலப் பொருளாளா் எம்.பி.செல்வம், வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த எல்.அம்புரோஸ் முன்னிலை வகித்தனா். விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஜி.கணேசன், உழவா் முன்னணியின் மாநிலச் செயலா் மா.தெய்வீகதாஸ் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். கூட்டத்தில், தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவை அளித்து, தோ்தல் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி, விவசாய சங்கங்களின் நிா்வாகிகள்உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் சி.வி.பரணிதரன் வரவேற்றாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஏ.ஆா்.வி.பீமாராவ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com