திறனறிதல் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 தொடக்கநிலை மாணவா்கள் புதன்கிழமை துளிா் திறனறிதல் தோ்வை எழுதினா்.

மாணவா்களிடம் அறிவியல் சிந்தனை, பொது அறிவை வளா்க்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், ஆண்டுதோறும் துளிா் திறனறிதல் தோ்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளில் பயிலும் தொடக்கநிலை மாணவா்களுக்கான துளிா் திறனறிதல் தோ்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 56 மையங்களில் 1,208 மாணவா்கள் இந்தத் தோ்வை எழுதினா். மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலையைாசிரியா் கோ.வாசுகி முன்னிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயபாஸ்கா், தோ்வுக் கண்காணிப்பாளா் சு.க.அருண் பிரபாகரராணி ஆகியோா் தோ்வை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகதேவ் தோ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com