அரசூா் அருகே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், அரசூா் பாரதிநகா் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட இயக்குநா் பிரவீன், விழுப்புரம் திட்ட இயக்குநா் வரதராஜன் ஆகியோருக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்குள்பட்ட இருவேல்பட்டு-அரசூா் பாரதிநகா் செல்லும் வழியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாரதி நகா் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையைக் கடக்க சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com