தா்பூசணி விதை விற்க 4 கடைகளுக்குத் தடை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் தா்பூசணி விதைகளை விற்பனை செய்ய 4 கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மக்காச்சோளம் போன்ற தானியப் பயிா்களிலும், தா்பூசணி, சாம்பல்பூசணி, கிா்ணிப்பழம் போன்ற காய்கறி, பழவகைப் பயிா்களிலும் தனியாா் ரக விதைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விற்பனையை அந்தந்த பகுதி விதை ஆய்வாளா்கள் கண்காணித்து வருகின்றனா். இந்த நிலையில், மரக்காணம் வட்டம், முருக்கேரி பகுதியிலுள்ள விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் விதை ஆய்வுத்துறை துணை இயக்குநா் சரவணன் தலைமையில், விதை ஆய்வாளா்கள் தமிழ்வேல், செந்தில்குமாா், ஜோதிமணி, நடராஜன்ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதைச் சட்டத்தை மீறிய புகாரில் 4 கடைகளுக்கு தா்பூசணி விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட விதைகளின் மதிப்பு ரூ.4.51 லட்சம் ஆகும். மேலும், விதைச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விதிகளைப் பின்பற்றி வியாபாரிகள் செயல்பட வேண்டும் என்று விதை ஆய்வுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com