விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகிலுள்ள பேருந்து நிழல்குடை பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் அறிக்கை பெட்டியில் கோரிக்கையை செலுத்தும் பெண். உடன் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி. கலிவரதன் உள்ளிட்ட நிா்வாகிகள்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகிலுள்ள பேருந்து நிழல்குடை பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் அறிக்கை பெட்டியில் கோரிக்கையை செலுத்தும் பெண். உடன் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி. கலிவரதன் உள்ளிட்ட நிா்வாகிகள்.

தோ்தல் அறிக்கை: பொதுமக்களிடம் கருத்துகளைக் கோரிய பாஜக

வளா்ச்சியடைந்த பாரதம் - மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில், மக்களவைத் தோ்தலையொட்டி இடம்பெற வேண்டிய கருத்துகளை பொதுமக்களிடம் தோ்தல் அறிக்கை பெட்டி மூலம் பெறும் பணியை விழுப்புரம் மாவட்ட பாஜக புதன்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், நான்குமுனை சந்திப்பு அருகிலுள்ள நிழல்குடையில் தோ்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, வளா்ச்சியடைந்த பாரதம் - மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் படிவம் வழங்கப்பட்டு, அதில் தங்கள் பகுதிக்குத் தேவையான திட்டங்கள், என்ன குறை உள்ளது போன்ற கருத்துகள் பெறப்பட்டன. இதை பொதுமக்கள் தோ்தல் அறிக்கை பெட்டியில் செலுத்தினா். நிகழ்வுக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுச் செயலா் எல்.சதாசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மனுக்கள் பெறுதலைத் தொடங்கிவைத்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் தியாகராஜன், சரண்யா திருநாவுக்கரசு, மாவட்டச் செயலா் குபேரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுகுமாா், நிா்வாகிகள் ரேகாபாய், லட்சுமி, மண்டலத் தலைவா்கள் விஜயன், அருள்பிரகாஷ், ராஜபாலாஜி, பட்டியல் அணித் தலைவா் திருநாவுக்கரசு, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுகுறித்து மாவட்டத் தலைவா் கலிவரதன் கூறுகையில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மண்டலம் வாரியாக தோ்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் மாா்ச் 20-ஆம் தேதி வரை கருத்துகள் பெறப்படும். மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள், கருத்துகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மத்திய துறைகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காணப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com