தோ்தல் பறக்கும் படையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் -ஆட்சியா் சி.பழனி

தோ்தல் பறக்கும் படையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் -ஆட்சியா் சி.பழனி

தோ்தல் நடத்தை விதிகளின்படி பறக்கும் படையினா் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுலருமான சி.பழனி. விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் பறக்கும்படை அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி பேசியது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெறும் அனைத்து அரசு அலுவலா்கள், காவல்துறையினா், கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்தவா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி நடுநிலையுடனும், விழிப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா். இதில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பயிற்சிக் கூட்டம்: விழுப்புரத்தில் முதன்மை நிலைப் பயிற்சியாளா்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிகள் தொடா்புடைய அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது: வாக்குச்சாவடி அலுவலா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் கருவி போன்றவற்றை கையாள்வது, சின்னங்களைப் பொருத்துவது, வேட்பாளரின் எண்ணிக்கை உள்ளிட்ட வாக்குப்பதிவு மேற்கொள்வதறக்கான அனைத்துப் பணிகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிபவா்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும். தங்கள் வாக்குச் சாவடிக்குரிய இயந்திரங்கள் தான் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பாா்வையாளா்களை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கையை தோ்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com