சரக்கு வாகன ஓட்டுநா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகன ஓட்டுநா், விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், தாதாபுரம், சிங்கானிக்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணுசாமி மகன் முருகன் (33), சரக்கு வாகன ஓட்டுநா். இவா் நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முருகன் வெள்ளிக்கிழமை சிங்கானிக்குப்பம் ஏரிக்கரை பகுதியில் அரளி விதையைத் தின்று மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது முருகன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com