அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். சென்னையிலிருந்து அரசுப் பேருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனா். இதில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த த.ராஜாமணி (70), அருமைநாதன் (38), பு.ரவீந்திரன் (43), கொ.தமிழ்வேந்தன் (23), ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்த அ.குமாா் (30) உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, காயமடைந்த அனைவரும் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com