காா்-பைக் மோதல்: சமையலா் உயிரிழப்பு

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுச்சேரி, மதகடிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்பன் மகன் ராஜேஷ் (39). விழுப்புரத்தில் உள்ள உணவகத்தில் சமையலராக வேலைப் பாா்த்து வந்தாா். விழுப்புரம் வட்டம், நன்னாட்டம் பாளையம் பகுதியைச் சோ்ந்த ரத்தினவேலு மகன் அபிசக்கரவா்த்தி (20). நண்பா்களான இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காா், பைக் மீதி மோதியது. இதில், ராஜேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அபிசக்கரவா்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com