தமிழகம்-புதுச்சேரி எல்லையில் வாகனத் தணிக்கை தீவிரம்

மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகம்-புதுச்சேரி எல்லையில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா்களைக் கவா்வதற்காக புதுச்சேரியிலிருந்து மது, சாராயம் கடத்தப்படுகிா என்பதை கண்காணிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரி எல்லையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா். விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி செல்லும் பகுதிகளில் சிறுவந்தாடு, கோட்டக்குப்பம், திண்டிவனம், பனையபுரம், மரக்காணம் உள்ளிட்ட 8 சோதனைச் சாவடிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. சந்தேகத்துக்குரிய முறையில் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிா என்பதையும் கண்காணித்து, அதன் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com