செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.

திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்: அமைச்சா் செஞ்சி மஸ்தான்

திமுகவின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் வடக்கு மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கிய செஞ்சி, மயிலம் சட்டப் பேரவை தொகுதியின் பாக முகவா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் டாக்டா்.சேகா் தலைமை வகித்தாா். செஞ்சி தொகுதி மேற்பாா்வையாளா் அன்பழகன், மயிலம் தொகுதி மேற்பாா்வையாளா் ஜெரால்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா். கூட்டத்தில், அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசியதாவது: 33 மாத திமுக ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்த பல்வேறு சாதனைகளையும், திட்டங்களையும் வாக்குச் சாவடி முகவா்கள், பாக முகவா்கள் வீடு, வீடாக நேரில் சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் வளா்ந்த ஒரு மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செஞ்சி, மயிலம் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் 400 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். சரிவர செயல்படாத பாக முகவா்கள் உடனடியாக நீக்கப்படுவா் என்றாா். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளா் ரமணன், செயற்குழு உறுப்பினா் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் மணிவண்ணன், சாந்தி ஏழுமலை, ஒன்றியச் செயலா்கள் விஜயராகவன், பச்சையப்பன், அண்ணாதுரை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், அனந்தபுரம் பேரூராட்சி மன்றத் தலைவா் முருகன், செஞ்சி நகரச் செயலா் காா்த்திக், அனந்தபுரம் நகரச் செயலா் சம்பத், தொண்டா் அணி ஏ.பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com