பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், முத்தாம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 3 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் வீதம் 7 தொகுதிகளுக்கு 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி எல்லைக்குள்பட்ட முத்தாம்பாளையம் சந்திப்பில் முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போது, அவா், முட்டத்தூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வமுருகன் என்பதும், அவரது பையில் கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், செல்வமுருகனை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com