பெண் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம், சாஸ்தா நகரைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி பரிதா(25). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்படுமாம். இதனால் விரக்தியடைந்த பரிதா திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com