பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி, பிரதானச் சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலாஜி (20). விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பாக்கத்திலிருந்து, விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்புற படிகட்டில் நின்றபடி பயணித்தாா். சிந்தாமணி அருகே பேருந்து சென்றபோது திடீரென நிலைத் தடுமாறி கீழே விழுந்த பாலாஜி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com