மரக்காணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு ஊா்வலம்.
மரக்காணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு ஊா்வலம்.

போலீஸாா், ராணுவம் அணிவகுப்பு

விழுப்பும் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் மரக்காணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம்: விழுப்பும் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் மரக்காணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மக்களவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் மரக்காணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமை வகித்து அணிவகுப்பை தொடங்கி வைத்தாா். மரக்காணம் திரௌபதி அம்மன் கோயில் அருகே தொடங்கிய ஊா்வமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது. அணி வகுப்பில், மாவட்ட காவல்துறையினா், 90 துணை ராணுவப்படை வீரா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com