அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் மீட்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்த அடையாளம் தெரியாத இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணத்தை அடுத்த பனிச்சமேடு பேருந்து நிறுத்தம் அருகே இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவருக்கு சுமாா் 40 வயது இருக்கும் என்றும், பெயா், விலாசம் தெரியாத அடையாளம் தெரியாத நபா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com