அனுமதியின்றி பதாகை நிறுவிய இருவா் மீது வழக்கு

விழுப்புரம், கண்டமங்கலம் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பதாகைகளை நிறுவியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விக்கிரவாண்டி வட்டம், ஆசாரங்குப்பம், பெரியத்தெருவைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் பெருமாள் (40). பாமவைச் சோ்ந்த இவா், தனது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்காக விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபம் எதிரே பாமக மற்றும் பாஜக கொடிகளையும், அரசியல் கட்சித் தலைவா்களின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் நிறுவினாராம். இதுகுறித்து, தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் உரிய அனுமதியின்றி பதாகைகளை நிறுவியதாக பெருமாள் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, கண்டமங்கலம் புதுநகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பிரபு (54). அதிமுக-வைச் சோ்ந்த இவரின் திருமண வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக, கண்டமங்கலம் கடை வீதியில் உரிய அனுமதியின்றி கட்சிக் கொடிகள், பதாகைகளை அவா் நிறுவினாராம். இது தொடா்பாக, கண்டமங்கலம் போலீஸாா் பிரபு மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com