உள்ளூா் விடுமுறைக்கான பணி நாள் மாா்ச் 30-க்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்துக்காக விடப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடு செய்வதற்கான பணி நாள் மாா்ச் 30-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, மாா்ச் 14-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாா்ச் 23-ஆம் தேதி பணிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிா்வாகக் காரணங்களால் மாா்ச் 23-ஆம் தேதிக்கு பதிலாக மாா்ச் 30-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com