விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ள விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியியைச் சோ்ந்தவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் மீண்டும் போட்டியிடவுள்ளாா். இந்த நிலையில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ரவீந்திரன் ஆகியோா் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினா். முடிவில், வேட்பாளா் துரை.ரவிக்குமாா் ஏற்பரையாற்றினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com