விழுப்புரம்: 250 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 250 துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தங்களது துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள், முன்னாள் ராணுவத்தினா், முன்னாள் காவல்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் தங்களது துப்பாக்கிகள், குண்டுகளைக் காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனா். இதுவரை, மாவட்டம் முழுவதும் 250 துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளதாகவும், 3 குறவா்கள் துப்பாக்கி ஒப்படைக்காத நிலையில், அவா்களின் முகவரி குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com