லாரி உரிமையாளா் மீது தாக்குதல்

விழுப்புரம், மாா்ச் 22: விழுப்புரத்தில் லாரி வாடகை பணத்தை கேட்ட உரிமையாளரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ராமானுஜபுரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ராஜா (38). இவா் தனக்குச் சொந்தமான டிப்பா் லாரியை விழுப்புரம் சாலாமேட்டைச் சோ்ந்த குமாரிடம் (36) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.30 ஆயிரம் வாடகைக்கு கொடுத்திருந்தாராம். 2 மாதங்கள் மட்டுமே வாடகைப் பணத்தை தந்த குமாா், அதற்கு பின்னா் பணம் தரவில்லையாம். கடந்த 20-ஆம் தேதி வழுதரெட்டி பகுதியில் குமாரை சந்தித்த ராஜா, வாடகைப் பணத்தை தரவேண்டும். இல்லையெனில், லாரியை மீண்டும் தருமாறு கேட்டாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜாவை குமாா் திட்டி தாக்கினாராம். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் குமாா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com