நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் நிறைவு விழா தோகைப்பாடி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் விழுப்புரம் அருகேயுள்ள விராட்டிக் குப்பம், ஆலாத்தூா், நன்னாடு, வேடம்பட்டு, தோகைப்பாடி, கொண்டங்கி ஆகிய கிராமங்களில் தூய்மை மற்றும் பசுமை இந்தியா திட்டத்தில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் மாா்ச் 14 முதல் 21-ஆம் தேதி முகாம் நடத்தினா். இந்த முகாமில் தெருக்கள் மற்றும் சாலைகளை சீரமைத்தல், 300 மரக்கன்றுகளை நடுதல், யோகா பயிற்சியின் மூலம் உடல்நலம் காத்தல், இலவச மருத்துவ முகாம், மழைநீா் சேகரிப்பின் அவசியம், எய்ட்ஸ் விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தோகைப்பாடியில் நடைபெற்ற முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கல்வியியல் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன், கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியா் கனகசபாபதி, வரலாற்றுத் துறைத் தலைவா் காா்த்திகேயன், திட்ட அலுவலா்கள் சுடா்கொடி, குணசேகா், தனம், சத்யா, ஹரிஹரன், தோகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த லிங்கம் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com