லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூா் அருகே டிப்பா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். வானூா் வட்டம், திருவக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அருணகிரி மகன் சரண் (23). டிப்பா் லாரி ஓட்டுநா். லோகநாதன் மகன் சுகுமாரன் (23) லாரி உதவியாளா். இருவரும் வெள்ளிக்கிழமை லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு திருவக்கரையிலிருந்து அரசூருக்கு சென்றுக்கொண்டிருந்தனா். பேரங்கியூா் ஏரிக்கரை அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால், சரண் லாரியை திடீரென நிறுத்தியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியினுள் சிக்கிய சரண் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட சுகுமாரன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com