அதிமுகவுக்கு ஆதரவு: முஸ்லிம் மக்கள் கழகக் கூட்டத்தில் முடிவு

மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என முஸ்லிம் மக்கள் கழகக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் சாா்பில், விழுப்புரம், ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக ஆதரவு தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முஸ்லிம் மக்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் சை.அ.சையத் அலாவுதீன் தலைமை வகித்தாா். திண்டிவனம் நகரத் தலைவா் மு. அப்துல் ஹக்கீம், கா. வஹாப், தொகுதிச் செயலா்கள் ர.காதா்கான், சி. சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியின் நிறுவனா் ச.சு.ஜைனுதீன் பங்கேற்று பேசினாா். மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது, விழுப்புரம், ஆரணி மக்களவைத் தொகுதிகளில்யில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com