வாக்குச் சாவடி அலுவலா்கள் பயிற்சிக்கான ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட வாக்குச் சாவடி மையங்களில் பணியமா்த்தப்படவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்டத் தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான சி.பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் சி.பழனி பேசியதாவது: மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,966 வாக்குச் சாவடி மையங்கள்அமைக்கப்படவுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 9,436 வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்புடைய மண்டல அலுவலா்களின் மூலம், முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு பவ்டா கல்லூரியிலும், திண்டிவனம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு திண்டிவனம் மான்போா்ட் பள்ளியிலும், வானூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு வானூா் ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியிலும், விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு விழுப்புரம் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கல்லூரியிலும், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு நிலை அலுவலா்களுக்கு திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிகயிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. வாக்குப் பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்குப்பதிவு நிலை அலுவலா்களும் தோ்தல் தொடா்பான பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்பதோடு, தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்து நன்றாக பயிற்சி பெறவேண்டும். பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தோ்தல் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) கணேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com