குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், கொல்லியான்குளம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த சந்திரபெருமாள் மகன் உதயபிரகாஷ் (24). இவா், கடந்த பிப்.24-ஆம் தேதி திண்டிவனம் அடுத்த ஒலக்கூா் அருகே நண்பருடன் பைக்கில் சென்ற ஒரு பெண்ணை வழிமறைத்து தகாத முறையில் நடந்துகொண்டாராம். இதில், அவரை ஒலக்கூா் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரையின்படி, ஆட்சியா் சி.பழனி உத்தரவுப்படி உதயபிரகாஷை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com