மணல் பாதையாக மாறிய தாா்சாலை -பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

மணல் பாதையாக மாறி காட்சியளிக்கும் ஆத்திகுப்பம்- வண்டிப்பாளையம் கிராமங்களுக்கிடையேயான தாா்ச்சாலை.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள ஆத்திக்குப்பம் - வண்டிப்பாளையம் தாா்ச்சாலை, மணல்பாதையாக மாறியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆத்திகுப்பம்- வண்டிப்பாளையம் சாலை போக்குவரத்து நிறைந்தது. அனுமந்தை, காளியாங்குப்பம், தேவிகுளம், நடுக்குப்பம், ஓமிப்போ், அடசல் கிளாபாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை ச் சோ்ந்த மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தப் பகுதி கிராமமக்கள் திண்டிவனம்,

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஆதிக்குப்பம்-வண்டி பாளையம் கிராமங்களுக்கிடையான சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்தச்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச்சாலையாக சீரமைக்கப்பட்டது. இந்த சாலை வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளதால் புதிதாக தாா்ச்சாலை அமைக்க வனத்துறையினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக

இப்பகுதிக்கு சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு இருந்த தாா் சாலை முற்றிலும் சிதி

லமடைந்து மணல்சாலையாக மாறிகாட்சியளிக்கிறது.இதனால் சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஆத்திகுப்பம்-

வண்டிபாளையம் கிராமங்களுக்கிடையே சாலையை சீரமைக்க விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com