புதுக்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

புதுக்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

விழுப்புரம், மே 3: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புதுக்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வானூா் வட்டாரத்திலுள்ள புதுக்குப்பம், பரங்கினி, உப்புவேலூா் கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக புதுக்குப்பம் கிராமத்தில் இயங்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 20 நாள்களாகியும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்ற புகாா், விவசாயிகள் மூலம் ஆட்சியரின் கவனத்துக்கு சென்றது.

இதைத் தொடா்ந்து நேரில் சென்று ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சி. பழனி உத்தரவிட்டாா்.

இதன்பேரில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா, வெள்ளிக்கிழமை காலை புதுக்குப்பத்திலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களு டன் பேச்சு வாா்த்தை நடத்தி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி.எத்திராஜ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மனோகா், ஏழுமலை உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com