மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வீட்டின் மேல்தளத்திலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வளவனூா் அருகிலுள்ள ஆலயாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் அன்புச்செல்வன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கு, வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததாம்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகிலுள்ள கோவிந்தராஜ் வீட்டின் மாடிப் பகுதியில் அன்புச்செல்வன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு திடீ ரென வலிப்பு ஏற்படவே, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்புச்செல்வன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அன்புச்செல்வன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com