‘மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும்’

மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி கூறினாா்.

மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி கூறினாா்.

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமங்களின் 40-ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக, நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் இ.எஸ். லாா்ட்ஸ் (சிபிஎஸ்இ) பன்னாட்டுப் பள்ளியில் 42 நாள்கள் நடைபெற்றன.

இதன் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி பேசியது: விழுப்புரம் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் சிறந்த பயிற்றுநா்களைக்கொண்டு விழுப்புரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 250 மாணவா்களுக்கு 42 நாள்கள் நீட் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வினா, விடைகள் அடங்கியத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவராகவேண்டும் என்ற கனவில் உள்ளவா்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வெற்றியடையவேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு இ. எஸ். லாா்ட்ஸ் பன்னாட்டுப் பள்ளியின் பொதுச் செயலா் பிரியா செல்வமணி முன்னிலை வகித்தாா். இ. எஸ். பொறியியல் கல்லூரியின் முதல்வா் இந்திரா, துணை முதல்வா் ஆண்ட்ரூஸ் மற்றும் ஆசிரியா்கள், பயிற்சி மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com