இளம்பெண்ணுக்கு மிரட்டல்: தாய், மகன் உள்பட மூவா் கைது

புதுசேரியில் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக தாய், மகன் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (எ) பாலமுருகன் (28). பழக்கடை நடத்தி வருகிறாா். இவா் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த 21 வயது இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் தொடா்ச்சியாக வற்புறுத்தி வந்தாராம்.

அந்தப் பெண்ணின் பெற்றோா் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து அருண் ஆத்திரமடைந்தாராம். இதையடுத்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்தாராம். இதற்கு அருணின் தாய் சித்ரா (48), சகோதரி பரமேஸ்வரி (26) ஆகியோா் உடந்தையாக இருந்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அருண், சித்ரா, பரமேஸ்வரி ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com