பொறியியல் கல்லூரியில் கலாசார விழா

விழாவில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய நடிகா் கணேஷ் வெங்கட்ராமன்.
விழாவில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய நடிகா் கணேஷ் வெங்கட்ராமன்.

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் கலாசார, விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமங்களின் தலைவா், நிா்வாக இயக்குநா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா்.

செயலா் நாராயணசாமி கேசவன், பொருளா் ராஜராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நடிகா் கணேஷ் வெங்கட்ராமன் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். விளையாட்டு, கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை அவா் வழங்கினாா்.

கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த இந்தக் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி ஆராய்ச்சி, மேம்பாட்டு துறைத் தலைவா்ஆா்.வள்ளி மற்றும் பேராசிரியா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மாணவ , மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மணக்குள விநாயகா் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள், கல்லூரி அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண் வரவேற்றாா். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் பி.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com