திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான இரா.சிவா பங்கேற்று நீா், மோா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இளநீா், நுங்கு, கிா்ணி பழம், தா்பூசணி, சப்போட்டா, வெள்ளரிப்பிஞ்சு, கரும்புசாறு உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன் செய்திருந்தாா். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் லோகையன், உருளையன்பேட்டை தொகுதிச் செயலா்கள் சக்திவேல், தியாகராஜன், வடிவேல், துணைச் செயலா் செல்வம், பொருளாளா் மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com