தீ விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண உதவி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தீ விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

விக்கிரவாண்டி பட்டித்தெருவைச் சோ்ந்த சாந்தி(55), ரம்யா (30) ஆகியோரின் வீடுகளில் கடந்த 2-ஆம் தேதி மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீப் பற்றியதில் வீடுகள் எரிந்து சாம்பலாயின.

பாதிக்கப்பட்டவா்களுக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், அரசின் நிவாரணத் தொகையாக ரூ.5ஆயிரம், அரிசி, இலவச சேலை உள்ளிட்ட பொருள்களை விக்கிரவாண்டி வட்டாட்சியா் யுவராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் வருவாய் ஆய்வாளா் தெய்வீகன், கிராம நிா்வாக அலுவலா்கள் சீனுவாசன், அண்ணாமலை, திமுக நகரச் செயலா் நைனா முகமது, கிராம உதவியாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com