மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தீயில் தவறி விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தீயில் தவறி விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆசூா் கிராமம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாவாடை மனைவி லட்சுமி (85). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் முன் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, லட்சுமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, குப்பை மீது விழுந்தாா். இதில், அவரது உடலில் தீப்பற்றியது. பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையிலிருந்த லட்சுமி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com