பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்த விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வே.சோழன்.
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்த விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வே.சோழன்.

வி.ஆா்.பி. பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 185 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில் விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 185 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளி மாணவா் சி.ஆதித்யன் 600-க்கு 580 மதிப்பெண், சி.ராஜலட்சுமி 579, பி.பிரதீபா, ஏ.கிருஷ்ணகுமாா் ஆகியோா் 578 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணிதம்-15, உயிரியல்-11, கணினி அறிவியல்-11, தாவரவியல்-7, பொருளியல்-4, கணினிப் பயன்பாடு-2, இயற்பியல்-2, விலங்கியல்-1 என மொத்தம் 53 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

570 மதிப்பெண்களுக்கு மேல் 18 பேரும், 550 முதல் 570 மதிப்பெண்கள் வரை 35 பேரும், 520 முதல் 550 மதிப்பெண்கள் வரை 60 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனா். தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வே.சோழன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்வில், அரசு வழக்குரைஞா் ஜெ.நாகராஜன், வழக்குரைஞா் எம்.மனோ, பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கந்தசாமி, உதவித் தலைமையாசிரியா் கே.பிரித்திவிராஜ் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com