சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டி நூல்களை பரிசாக வழங்கிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் செயலா் பி.கே.ஜனாா்த்தனன்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டி நூல்களை பரிசாக வழங்கிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் செயலா் பி.கே.ஜனாா்த்தனன்.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளி மாணவி எஸ்.பவ்யஸ்ரீ 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று, விழுப்புரம் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றாா். இவா், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். மாணவி ஆா்.பிரதீபா 594 மதிப்பெண், ஜெ.சரண்யா 593 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணிதப் பாடத்தில் 31 போ், வேதியல் 24, உயிரியல் 19, இயற்பியல் 18, பிரெஞ்சு 15, கணினி அறிவியல் 11, வணிகவியல் 8, கணினிப் பயன்பாட்டியல் 2, கணக்கியல் 1 என மொத்தம் 129 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனா். இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 165 பேரும் தோ்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ஜெ.பிரகாஷ் , செயலா் பி.கே.ஜனாா்த்தனன் ஆகியோா் பாராட்டினா். அவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்வில், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com