செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள்.

செஞ்சியில் பலத்த மழை: 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் புதன்கிழமை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

செஞ்சியில் கடந்த சில தினங்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

செஞ்சியை அடுத்துள்ள நரசிங்கராயன்பேட்டையில் ஆறுமுகத்துக்குச் சொந்தமான 3 எருமை மாடுகள் மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் பதாகை, கூட்டுச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பசுமை நிழல்குடை, விளம்பரப் பதாகைகள் சாலையில் சாய்ந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com