விழுப்புரம் இ.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

விழுப்புரம் இ.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

விழுப்புரம், மே 10: விழுப்புரம் இ.எஸ்.எஸ்.எம். கல்வி அறக்கட்டளையின் ஓா் அங்கமான இ.எஸ். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

இதன் மூலம் தொடா்ந்து 26-ஆவது ஆண்டாக தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 36 மாணவா்கள், 40 மாணவிகள் என 76 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எம்.எஸ்.தா்ஷினி 491 மதிப்பெண்கள், ஆா். சீதாலட்சுமி 483 மதிப்பெண்கள், ஏ.நதீரா 482 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இவா்களை பள்ளித் தாளாளா் எஸ்.செல்வமணி, செயலா் எஸ்.பிரியா செல்வமணி, பள்ளி முதல்வா்கள் எஸ்.சித்ராதேவி, எம்.லலிதா மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com