செஞ்சிக் கோட்டைக்கு செல்ல அனுமதி இலவசம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டைக்கு செல்ல மே 13-ஆம்தேதி முதல் 22-ஆம் தேதி வரை அனுமதி இலவசம் என இந்திய தொல்லியியல் துறையினா் தெரிவித்தனா்.

செஞ்சிக்கோட்டை மலை மீது பழைமையான ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 13-ஆம்தேதி ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. மே 22-ஆம்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தா்கள் செஞ்சிக்கோட்டைக்கு சென்று வர தொல்லியியல் துறையினா் இலவசமாக அனுமதி வழங்கியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com