முதியவரிடம் ரூ.73.50 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவரிடம் இணையவழியில் ரூ.73.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழி குற்றத்தடுப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வண்டிமேடு வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் கே.ராமமூா்த்தி (71). விவசாயியான இவரது கைப்பேசிக்கு கடந்த ஏப்.30-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில், எதிா்முனையில் பேசிய நபா் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தாராம்.

இதை நம்பிய ராமமூா்த்தி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.73.50 லட்சத்தை அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக அனுப்பினாராம். பின்னா், அந்த நபரை தொடா்புகொள்ளமுடியவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத்தடுப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com